IND vs NZ : இந்தியா நியூசிலாந்து டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – முழுலிஸ்ட் இதோ

IND
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் அடுத்தடுத்து இந்திய அணி பல்வேறு தொடர்களில் விளையாட இருப்பதினால் வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு சீனியர் வீரர்களுக்கு ஓய்வும் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு போதிய வாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கும் வீரர்களுக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வருகிற நவம்பர் 13-ம் தேதியோடு உலகக் கோப்பை முடிவடையவுள்ள வேளையில் இந்திய அணி ஆஸ்திரேலியாலிருந்து நேரடியாக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு நவம்பர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் டி20 வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் முகமது ஷமி போன்றவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது இந்திய அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் பல இளம் வீரர்களுக்கு இந்த நியூசிலாந்து தொடருக்கான அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியா செயல்படுவார் என்றும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என்றும் இந்திய அணியின் நிர்வாகமான பிசிசிஐ நேற்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த டி20 தொடரில் பங்கேற்க இருக்கும் 16 வீரர்கள் கொண்ட பட்டியலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் 16 வீரர்கள் கொண்ட முழு லிஸ்ட் இதோ :

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த தரமான 6 ஃபீல்டர்களின் பட்டியல்

1) ஹார்டிக் பாண்டியா (கேப்டன்), 2) ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் & து.கேப்டன்), 3) சுப்மன் கில், 4) இஷான் கிஷன், 5) தீபக் ஹூடா, 6) சூரியகுமார் யாதவ், 7) ஷ்ரேயாஸ் ஐயர், 8) சஞ்சு சாம்சன், 9) வாஷிங்க்டன் சுந்தர், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) குல்தீப் யாதவ், 12) ஹர்ஷல் படேல், 13) அர்ஷ்தீப் சிங், 14) முகமது சிராஜ், 15) புவனேஷ்வர் குமார், 16) உம்ரான் மாலிக்.

Advertisement