இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பரவிவரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே மைதானத்தில் ரசிகர்கள் இன்றி இந்த ஒருநாள் தொடரை நடத்துவதாக தீர்மானம் செய்த பிசிசிஐ அகமதாபாத் மைதானத்தில் மட்டுமே இந்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்நது நடைபெறும் என்று அறிவித்தது.

அதன்படி கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது நேற்று ஒன்பதாம் தேதி நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணியானது 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த சாதனை யாதெனில் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் கடைசியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் தான் 240 ரன்களுக்கும் குறைவான இலக்கினை நிர்ணயித்து ஒருநாள் போட்டியில் எதிரணியை சுருட்டி வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது தான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 240 ரன்களுக்கும் குறைவாக 237 ரன்களை மட்டுமே குவித்து இந்த இலக்கிற்கு உள்ளேயே வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியில் சிறப்பான பவுலர்கள் உருவாகி உள்ளதால் இது சாத்தியம் என்றாலும் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி படைத்த இந்த சாதனையை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு முழுநேர கேப்டனாக பொறுப்பேற்று ரோஹித் சர்மா இப்படி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருவதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.
இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் உயிரை கொடுத்து விளையாடுனது நானு. பேரு மட்டும் அவருக்கா? – இந்திய வீரர் ஆதங்கம்
மேலும் கேப்டன் ரோகித் சர்மா இந்த இரண்டாவது போட்டி துவங்கும் முன்னரே டாஸின் போது நாங்கள் முதலில் பேட்டிங் செய்து ரன்களை அடித்து அதன் பின்னர் அதற்கு ஏற்றவாறு எதிரணியை கட்டுப்படுத்தி வீழ்த்த வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதலிரு போட்டிகள் முடிவடைந்து இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றிய வேளையில் நாளை பிப்ரவரி 11 ஆம் தேதி அதே அகமதாபாத் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



