வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

இதற்காக தற்போது இந்திய அணியின் வீரர்கள் நாடு திரும்பி ஆசிய கோப்பை தொடருக்காக தயாராகி வரும் வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது.
முதன்மை வீரர்கள் ஆசிய கோப்பை தொடருக்காக தயாராக இருக்கும் வேளையில் ஷிகார் தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணி வருகிற 18-ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாடுகிறது. அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி 20ஆம் தேதியும், மூன்றாவது போட்டியில் 22ஆம் தேதியும் நடைபெற இருக்கின்றன.

இந்த மூன்று போட்டிகளுமே ஜிம்பாப்வேவில் உள்ள ஹராரேவில் நடக்கிறது. இந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் கீழ் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் லிஸ்ட் இதோ :
இதையும் படிங்க : இந்திய அணிக்கு பெரிய குழப்பமே இந்த விஷயத்தால் தான் வரப்போகுது – எச்சரித்த ராஜ்குமார் சர்மா
ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, தீபக் ஹுடா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அேலஷ்கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாகர்.



