IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவது மற்றும் 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான – இந்திய அணி அறிவிப்பு

IND vs AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

அதனை தொடர்ந்து பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லியில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியிலும் மீண்டும் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான அணி மட்டுமே அறிவிக்கப்பட்ட வேளையில் தற்போது மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருந்த அதே வீரர்கள் இந்த மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதேபோன்று ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் விளையாடுவதற்காக அணியிலிருந்து வெளியேறிய ஜெயதேவ் உனட்கட் தற்போது மீண்டும் கடைசி இரண்டு போட்டிக்கான அணிக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

அதனைத்தவிர்த்து அணியில் வேறுயெந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் முழு வீரர்களின் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : வீடியோ : 100வது போட்டியில் டக் அவுட்டானாலும் வின்னிங் ஷாட் அடித்து தனித்துவமான உலக சாதனை படைத்த புஜாரா

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) சுப்மன் கில், 4) புஜாரா, 5) விராட் கோலி, 6) கே.எஸ் பரத், 7) இஷான் கிஷன், 8) அஸ்வின், 9) அக்சர் படேல், 10) குல்தீப் யாதவ், 11) ரவீந்திர ஜடேஜா, 12) முகமது ஷமி, 13) முகமது சிராஜ், 14) ஷ்ரேயாஸ் ஐயர், 15) சூரியகுமார் யாதவ், 16) உமேஷ் யாதவ், 17) ஜெய்தேவ் உனட்கட்.

Advertisement