ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – ஏகப்பட்ட மாற்றங்கள் இதோ

IND-vs-AFG
- Advertisement -

சமீபத்தில் தென்ப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி முடித்து நாடு திரும்பிய வேளையில் அடுத்ததாக இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணித்தேர்வு குறித்து அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்த வேளையில் இன்று இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த இந்திய அணியில் மீண்டும் டி20 உலக கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்த கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாகவே அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோன்று நட்சத்திர அனுபவ வீரரான விராட் கோலிக்கும் இந்த அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதனை தவிர்த்து முக்கிய வீரர்கள் பலருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜனவரி 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்கான இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா சூரியகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாத வேளையில் மேலும் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ரோஹித் மற்றும் கோலியை தவிர்த்து முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி நிச்சயம் இந்த தொடரில் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : கேமரா இல்லாததால்.. அப்போல்லாம் அந்த நாட்டு நிறைய பேர் பவுலர்ஸ் பந்தை சேதப்படுத்திருக்காங்க.. பிரவீன் குமார்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) விராட் கோலி, 5) திலக் வர்மா, 6) ரிங்கு சிங், 7) ஜிதேஷ் சர்மா, 8) சஞ்சு சாம்சன், 9) சிவம் துபே, 10) வாஷிங்க்டன் சுந்தர், 11) அக்சர் படேல், 12) ரவி பிஷ்னாய், 13) குல்தீப் யாதவ், 14) அர்ஷ்தீப் சிங், 15) ஆவேஷ் கான், 16) முகேஷ் குமார்.

Advertisement