கேமரா இல்லாததால்.. அப்போல்லாம் அந்த நாட்டு நிறைய பேர் பவுலர்ஸ் பந்தை சேதப்படுத்திருக்காங்க.. பிரவீன் குமார்

Praveen Kumar
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக நிறைவு பெற்ற தொடருடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து நட்சத்திர ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். கடந்த 2009இல் அறிமுகமாகி துவக்க வீரராக அதிரடியாக விளையாடிய அவர் 2015, 2023 ஆகிய உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். மேலும் 2021 டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய பட்டங்களையும் வென்ற அவர் அனைவரது பாராட்டுக்கு மத்தியில் விடை பெற்றார்.

இருப்பினும் கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் சிக்கியது அவருடைய கேரியரில் இப்போதும் கருப்பு புள்ளியாக பார்க்கப்படுகிறது. அந்தத் தொடரில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் ஃபான்கிராப்ட் ஆகியோர் உப்புக் காகிதத்தை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியது கேமராவில் அம்பலமானது.

- Advertisement -

நிறைய பவுலர்கள்:
இறுதியில் நடத்தப்பட்ட விசாரணையில் அது நிரூபிக்கப்பட்டதால் அந்த 3 பேருக்குமே குறிப்பிட்ட சில காலம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நிறைய பவுலர்கள் நவீன டெக்னாலஜி மற்றும் அதிக கேமராக்கள் இல்லாத காலங்களில் பந்தை அதிகமாக சேதப்படுத்தியதாக முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் யாரும் அறியாத பின்னணியை பகிர்ந்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அனைவருமே அதை சற்று செய்வார்கள். ஆனால் அவர்கள் (பாகிஸ்தான் பவுலர்கள்) சற்று அதிகமாக செய்வார்கள். இதைத் தான் நான் அதிகமாக கேள்விப்பட்டேன். தற்போது அனைத்து இடங்களிலும் கேமராக்கள் இருக்கிறது. ஆனால் அது அதிகமாக இல்லாத காலங்களில் அவர்கள் அனைவரும் அதை செய்வார்கள். அதை பலரும் அறிவார்கள்”

- Advertisement -

“அவர்கள் பந்தை ஒருபுறமாக தேய்ப்பார்கள். அந்த கலையை பயன்படுத்துவதற்கும் திறமை வேண்டும். எடுத்துக்காட்டாக நான் பந்தை தேய்த்து ஒருவரிடம் கொடுத்தால் அதை ஸ்விங் செய்வதற்கு ஒரு பவுலரிடம் திறமை வேண்டும். அதை செய்ய ஒருவர் கற்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக 1990 – 2000 காலகட்டங்களில் சில பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டப் புகாரில் சிக்கி தடைப்பெற்ற கதைகள் ஏராளமாகும்.

இதையும் படிங்க: அஸ்வின் போன்ற ஸ்பின்னர்களை விட அவங்க தான் சவாலை கொடுப்பாங்க.. ஜானி பேர்ஸ்டோ பேட்டி

அந்த வகையில் நவீன கிரிக்கெட்டுக்கு முன்பாக நிறைய பாகிஸ்தான் பவுலர்கள் பந்தை சேதப்படுத்திய கதைகள் ஏராளம் என்று பிரவீன் குமார் கூறியுள்ளார். மேலும் சேதப்படுத்திய பந்தை வைத்து ரிவர்ஸ் ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களை திணறடித்து விக்கெட்டுகளை எடுப்பதற்கும் திறமை வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement