IND vs WI : இப்படியா டி20 டீமை செலக்ட் பண்ணுவீங்க. அணித்தேர்வை விமர்சிக்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

ind
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது அண்மையில் நடைபெற்ற முடிந்தது. இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் போது ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் தற்போது அணிக்கு திரும்பவதால் நிச்சயம் இந்த டி20 தொடரையும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs WI

- Advertisement -

அதே வேளையில் ஒருநாள் கிரிக்கெட்டை காட்டிலும் பலம் வாய்ந்த அணியாக டி20 கிரிக்கெட்டில் பார்க்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணிக்கு கடும் சவாலினை அளிக்கும் என்பதனால் இந்த டி20 தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது.

அதேபோன்று தற்போது இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் பல வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே துவங்க உள்ள முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் தற்போது உச்சத்தில் உள்ளது.

RIshabh Pant Dinesh Karthik

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணி தேர்வில் அணி நிர்வாகம் சற்று மோசமான தேர்வினை செய்துள்ளதாக ரசிகர்கள் மத்தியில் ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. அதற்கு காரணம் யாதெனில் தற்போதைய டி20 அணியில் கேப்டன் ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்கும் வேலையில் மற்றொரு துவக்க வீரருக்கான இடத்தில் யார் இறங்குவார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் துவக்க வீரருக்கான இடத்தில் தற்போது இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் நான்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் எந்த வீரர் விக்கெட் கீப்பிங் செய்வார் என்று என்பதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. அதன்படி இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய நான்கு பேர் விக்கெட் கீப்பராக அணியில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : அந்த 2 இளம் வீரர்களால் 4 – 5 கப் வாங்கப்போகிறோம் – தெ.ஆ ஜாம்பவான் கணிப்பால் மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆனாலும் சமீப காலமாகவே டி20 கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் பினிஷராக களமிறங்கி வருவதால் அவர் பேட்ஸ்மேனாகவும், துவக்க வீரராக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் ஓப்பனராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement