19 ஆண்டுகால ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த இந்திய அணி – விவரம் இதோ

Deepak Chahar IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் தங்களது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த தொடரில் இனிவரும் அடுத்தடுத்த ஆட்டங்களிலும் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என்று அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

VIrat Kohli IND vs PAK.jpeg

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணியின் 19 ஆண்டு கால சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. அந்த வகையில் மெல்போர்ன் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியோடு சேர்த்து இந்திய அணி இந்த ஆண்டில் மட்டும் 39 வெற்றிகளை பெற்றுள்ளது.

குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியானது டெஸ்ட் வடிவத்தில் இரண்டு வெற்றிகள், ஒருநாள் கிரிக்கெட்டில் 13 வெற்றிகள், டி20 கிரிக்கெட்டில் 24 வெற்றிகள் என இந்த ஆண்டு முழுவதும் இந்திய அணிக்கு 39 வெற்றிகள் கிடைத்துள்ளது.

indvsaus

இதற்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக ஆஸ்திரேலிய அணி 38 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தது. கடந்த 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த வேளையில் தற்போது 19 ஆண்டுகள் கழித்து இந்திய அணி 39 வெற்றிகளுடன் அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி இல்ல. இவரு இல்லாம இந்திய அணியே கிடையாது. அவ்ளோ சூப்பர் பிளேயர் அவரு – கபில் தேவ் கருத்து

மேலும் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் இன்னும் பல வெற்றிகளை இந்திய அணி சுவைக்க உள்ளதால் இந்த பட்டியலில் யாரும் எட்ட முடியா இடத்திற்கு கூட செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்த டி20 உலககோப்பை முடிந்த கையோடு இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடர்களிலும் பங்கேற்று விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement