மாபெரும் சாதனையுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்திய அணி – விவரம் இதோ

IND vs WI
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது நடப்பு சாம்பியனாக தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் சுற்று ஆட்டங்களில் நான்கு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது. பின்னர் சூப்பர் 8 சுற்று போட்டியின் போது :

மாபெரும் சாதனையை நிகழ்த்திய இந்திய அணி :

தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமா? என்ற கேள்வி எழுந்த வேளையில் அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 8 சுற்று போட்டியலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்களை குவிக்க பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அரையிறுதிக்கு சென்றது.

இந்த போட்டியில் இந்திய அணி அடைந்த வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வரும் வேளையில் இந்திய அணி ஒரு மாபெரும் சாதனை ஒன்றின் நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி அதிகபட்சமாக 173 ரன்களை சேசிங் செய்ததே சாதனையாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 3 ரன்களில் சதத்தை தவறவிட்டாலும் விராட் கோலி மற்றும் ரோஹித்தை கடந்து சாதனை நிகழ்த்திய – சஞ்சு சாம்சன்

கடந்த 2016 ஆம் ஆண்டு மீர்பூர் நகரில் நடைபெற்ற போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி 173 ரன்கள் குவித்து வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் 196 ரன்களை சேசிங் செய்து பெரிய சேசிங் வெற்றியாக இந்த போட்டி சாதனையாக நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement