இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் டி20 போட்டிகளில் தொடர்ச்சியான வாய்ப்பின்றி தவித்து வந்தார். குறிப்பாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் வரை முதன்மை துவக்க வீரராக இருந்த அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது ஃபார்ம் அவுட்டானதன் காரணமாக நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரின் துவக்க வீரருக்கான வாய்ப்பையும் இழந்தார். இதன் காரணமாக ஆரம்ப கட்ட போட்டிகளில் இஷான் கிஷன் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து விளையாடி வந்தார்.
சஞ்சு சாம்சன் நிகழ்த்திய அசத்தல் சாதனை :
ஆனால் இரண்டு பேருமே இடது கை ஆட்டக்காரர்கள் என்பதால் இந்திய அணிக்கு சரிவு ஏற்பட மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சூப்பர் 8 சுற்றின் போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது நல்ல துவக்கத்தை அளித்த அவருக்கு நேற்றைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் துவக்க வீரருக்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட அவர் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்கள் குவிக்க பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 97 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டம் பாராட்டுக்களை பெற்று வரும் வேளையில் சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக அவர் டி20 உலக கோப்பை போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : டி20 உலக கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சுரேஷ் ரெய்னா தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 101 குவித்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க : நாங்க செய்ஞ்ச தப்பு தான் இந்த நிலைமைக்கு காரணம்.. தோல்விக்கு பிறகு – சாய் ஹோப் வருத்தம்
அவருக்கு அடுத்து ரோகித் சர்மா 92 ரன்களையும், விராட் கோலி 89 ரன்களையும் குவித்திருந்த வேளையில் அவர்கள் இருவரையும் தாண்டி சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து டி20 உலககோப்பை போட்டிகளில் அதிக ரன்களை ஒரே போட்டியில் அடித்த இரண்டாவது இந்திய வீரராக சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



