இறுதிப்போட்டியில் அடித்த 255 ரன்கள் மூலம் இந்திய அணி நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

IND
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடியிருந்த சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய வேளையில் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

7 ஆவது முறையாக இந்திய அணி நிகழ்த்திய சாதனை :

நடப்பு சாம்பியனாக இந்த 2026 டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணியானது இந்த தொடர் முழுவதுமே விளையாடி ஒரு தோல்வியை மட்டுமே பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்கையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

- Advertisement -

அடுத்ததாக விளையாடிய நியூஸிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 159 ரன்களுக்கு சுருண்டதால் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ருசித்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி 255 ரன்கள் குவித்த வேளையில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளது.

அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : டி20 போட்டிகளில் இந்திய அணி 250+ ரன்கள் கடப்பது இது ஏழாவது முறை. இந்திய அணிக்கு அடுத்து இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மூன்று முறை மட்டுமே செய்துள்ளனர். மற்ற எந்த ஒரு முன்னணி அணியும் இதுவரை இரண்டு முறை கூட 250க்கும் மேற்பட்ட ரன்களை டி20 போட்டிகளில் அடித்ததில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : கேன் வில்லியம்சன், மார்லன் சாமுவேல்ஸ் இருவரையும் கடந்து சஞ்சு சாம்சன் – நிகழ்த்திய சாதனை

இவ்வேளையில் இந்திய அணி ஏழு முறை 250 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த நடப்பு 2026 டி20 உலககோப்பை தொடரில் மூன்று முறை 250-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்திருந்தது. அதோடு இந்த 2026 ஆம் ஆண்டில் மட்டும் நான்காவது முறையாக 250 ரன்களை இந்திய அணி கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement