ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஹராரே மைதானத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைக் ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்தியா மற்றும் ஜம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது நேற்று நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை குவித்தது.
இந்திய அணி சார்பாக கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, சிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இந்திய அணியானது :
துவக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பின்றி 15.2 ஓவர்களில் 156 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 93 ரன்களையும், சுப்மன் கில் 58 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணி பெற்ற படைத்த சாதனை குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வகையில் 150 ரன்களுக்கு மேல் அதிக பந்துகளை மிச்சம் வைத்து விக்கெட் இழப்பின்றி சேசிங் செய்யப்பட்ட மிகப்பெரிய டார்கெட்டாக இந்த போட்டி மாறியுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 2016-ஆம் ஆண்டு இதே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இதே மைதானத்தில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றிருந்தது.
இதையும் படிங்க : அவங்க ஆடுனதை பாத்தா நாங்க 180 ரன்ஸ் அடிச்சிருந்தா கூட பத்தியிருக்காது போல – சிக்கந்தர் ராசா பேட்டி
இவ்வேளையில் தற்போது இரண்டாவது முறையாக அந்த சாதனையை மீண்டும் இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. கடந்த 2016-ல் 100 ரன்கள் என்கிற இலக்கினை வெற்றிகரமாக துரத்தி அவர்களை வீழ்த்தியது. மேலும் இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தற்போதே கைப்பற்றியுள்ளது குறிப்பிடப்பட்டது.



