IND vs AUS : இனிமே நோ ப்ராப்லம். ஆடாமலே ஜெயிச்ச இந்திய அணி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி

IND 1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது.

IND vs AUS

- Advertisement -

ஆனால் தற்போது நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் இந்திய அணி தற்போதே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முதல் அணியாக ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்திய அணி இந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது கடைசி போட்டி டிராவை நோக்கி செல்வதால் இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமெனில் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது அங்கு நடைபெற்று வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் தோற்றாலோ அல்லது டிரா ஆனாலோ கூட இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று கூறப்பட்டது.

Nathan Lyon Pujara IND vs AUS

இந்நிலையில் கடந்த மார்ச் 9ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இலங்கை அணியானது இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் கடைசி பந்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய நியூசிலாந்து அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

- Advertisement -

இறுதிவரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இறுதி ஓவரின் கடைசி பந்தில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க : NZ vs SL : வீடியோ – கடைசி பந்தில் நிகழ்ந்த பரபரப்பு, காப்பாற்றிய வில்லியம்சன் – இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்றதா?

இப்படி நியூசிலாந்து அணி முதல் போட்டியிலேயே இலங்கை அணியை வீழ்த்தி விட்டதால் இனி இந்திய அணி இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜெயித்தாலும், தோற்றாலும் எந்த ஒரு பிரச்சனையும் இந்திய அணிக்கு ஏற்படாது என்றும் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement