இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் ஐந்து விக்கெட் இந்திய அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி இருந்தது. அதன்காரணமாக இந்த தொடரில் (1-0) என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது போட்டியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை இரண்டாம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளதால் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்க இருக்கிறது.
இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது மூன்றாவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் இரண்டு இன்னின்ஸ்களிலுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றத்தை அளித்தார்.
அதன்காரணமாக அவர் இரண்டாவது போட்டியிலிருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது. அதே வேளையில் டாப் ஆர்டரில் விளையாடி பழக்கப்பட்ட கருண் நாயர் கடந்த போட்டியில் ஆறாவது வீரராக களமிறங்கி சொதப்பியதால் அவர் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றப்படுவார் என்று தெரிகிறது.
இதன் காரணமாக நிதீஷ் குமார் ரெட்டி கூடுதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஏழாம் இடத்தில் களம் இறங்குவார். அதே போன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இரண்டாவது போட்டியின் போது ஓய்வெடுக்க இருப்பதால் அவருக்கு பதில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த எட்ஜ்பேஸ்டன் ஆடுகளத்தில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : அப்படின்னா இந்திய அணியின் கம்பேக் சோளி முடிஞ்ச்சா? கனவை உடைக்கக் காத்திருக்கும் பர்மிங்காம் வரலாறு
இப்படி இரண்டு முக்கிய மாற்றங்கள் அடுத்த போட்டிக்கு முன்னர் நிகழ வாய்ப்புள்ளது. இருந்தாலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



