இந்தியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகின்றன. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் அந்தப் போட்டியில் பேட்டிங் துறையில் அபாரமாக செயல்பட்ட இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக 5 சதங்களை வைத்து சாதனை படைத்தது.
இருப்பினும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யத் தவறிய இந்தியா ஃபீல்டிங் துறையில் 7 கேட்ச்கள் தவற விட்டது. அதனால் சுப்மன் கில் தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டியிலேயே போராடி தோற்றது. அதன் காரணமாக ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக இந்தியா மோசமான உலக சாதனை படைத்தது.
கம்பேக் கனவு:
அந்த வகையில் சுப்மன் கில் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய பயணத்தை தோல்வகரமாக துவக்கியுள்ளது. இருப்பினும் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பியதால் மட்டுமே இந்தியா தோல்வியை சந்தித்தது. எனவே அதிலிருந்து பாடங்களைக் கற்றுள்ள இளம் இந்திய அணி 2வது போட்டியில் வென்று கம்பேக் கொடுக்க தயாராகி வருகிறது.
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2வது போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் இருக்கும் எட்ஜ்பஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை இரண்டாம் தேதி துவங்குகிறது. ஆனால் அந்த மைதானம் இந்திய அணிக்கு ராசியற்ற மைதானமாக இருப்பது ரசிகர்களுக்கு கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆம் அந்த மைதானத்தில் இந்தியா 1967 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
சோளி முடிகிறதா:
இதுவரை அங்கே இந்தியா மொத்தம் 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 8 போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா ஒரு வெற்றியைக் கூட பெற்றதில்லை. எஞ்சிய ஒரு போட்டியை 1986ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்தியா மிகவும் போராடி டிரா செய்தது. கடைசியாக 2022ஆம் ஆண்டு 2 – 1* என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்தியா எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் 5வது போட்டியில் விளையாடியது.
இதையும் படிங்க: சுதர்சனுக்கு பதில் இந்தியா அவரை சேர்க்கனும்.. சுப்மன் கில் இந்த 2 அட்டாக் பண்ணனும்.. அலெஸ்டர் குக் அட்வைஸ்
ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் களமிறங்கிய அப்போட்டியில் 378 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த இங்கிலாந்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. அந்த வகையில் பர்மிங்காம் மைதானம் இங்கிலாந்தின் கோட்டையாகவும் இந்தியாவுக்கு ராசியற்ற மைதானமாகவும் இருக்கிறது. இதை அறியும் இந்திய ரசிகர்களால் “அப்படின்னா 2வது போட்டியில் கம்பேக் கனவின் சோளி முடிந்ததா?” என்று சமூக வலைதளங்களில் கவலையை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.



