
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற இருக்கிறது.
அந்த வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை டிசம்பர் 9-ஆம் தேதி கட்டாக் நகரில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் அங்கு தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
அந்த வகையில் இந்த முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த உத்தேச பட்டியலை உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இந்த டி20 போட்டிக்கான துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விளையாடுவார்கள். அதேபோன்று மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ், திலக் வருமா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் இடம் பிடிப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர்களாக ஹர்ஷித் ராணா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர்கள் இருப்பார்கள் என்று தெரிகிறது. சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.
எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த தொடரானது நடைபெற இருப்பதினால் இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : எனக்கான டைம் வரும் அப்போ நான் யாருன்னு காமிப்பேன்.. நிராகரிப்பு குறித்து – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கருத்து
1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) குல்தீப் யாதவ், 9) வருண் சக்கரவர்த்தி, 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) ஹர்ஷித் ராணா.