IND vs WI : இன்றைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Indian-Team
- Advertisement -

இங்கிலாந்து தொடரை முடித்த கையோடு வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சென்ற இந்திய அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கும் பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் வாஷ்அவுட் செய்து கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று முதல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற முடிந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட வேளையில் தற்போது இந்த டி20 தொடருக்கான அணிக்கு அவர்கள் அனைவரும் திரும்புகின்றனர்.

IND vs WI

இதன் காரணமாக தற்போது மீண்டும் முழு பலத்துடன் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த டி20 தொடரில் விராட் கோலி, பும்ரா ஆகியோரை தவிர்த்து பலம் வாய்ந்த இந்திய அணியே வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதன்படி இன்றைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும்? எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது. அதனை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார்.

Shreyas Iyer IND vs WI

நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவும் விளையாடுவார்கள். ஆல்ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. ஏழாவது இடத்தில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோரும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

அதேபோன்று சுழப்பந்து வீச்சாளர்களாக அஷ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதன்படி இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs WI : முதல் டி20 நடக்கும் பிரையன் லாரா மைதானத்தின் சிறப்பம்சம், வரலாற்று புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட்

1) ரோஹித் சர்மா, 2) ரிஷப் பண்ட், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஹர்ஷல் படேல், 9) புவனேஷ்வர் குமார், 10) ரவிச்சந்திரன் அஷ்வின், 11) குல்தீப் யாதவ்

Advertisement