- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெ.இ அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ அறிவித்திருந்தது. அந்த வகையில் அக்டோபர் 2-ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் துவங்க இருக்கும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் :

அந்த வகையில் இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யாருக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த உத்தேச பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணியில் துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் விளையாடுவது உறுதி.

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவர்கள் இருவரும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவர்களே இந்த தொடரிலும் துவக்க வீரர்களாக இருப்பார்கள். அதேபோன்று மூன்றாவது இடத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவார். இங்கிலாந்து தொடரில் அவர் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் இளம் வீரரான அவர் மீது நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் அவரே மூன்றாவது வீரராக விளையாடுவார்.

நான்காவது இடத்தில் வழக்கம் போல கேப்டன் சுப்மன் கில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது உறுதி. ஐந்தாவது இடத்தில் கருண் நாயருக்கு பதிலாக இடது கை ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் விளையாடுவார். அண்மையில் இந்திய ஏ அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இனி டெஸ்ட் அணியில் ஐந்தாம் இடத்தில் நிரந்தரமாக விளையாட அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

ஆறாவது இடத்தில் காயமடைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்க்கு பதிலாக துருவ் ஜுரேல் விளையாடுவார் என்று தெரிகிறது. ஏழாவது இடத்தில் இந்திய அணியின் துணை கேப்டனான ரவீந்திர ஜடேஜாவும், எட்டாவது இடத்தில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாட அதிக வாய்ப்புள்ளது. அதேபோன்று இம்முறை சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறுவதால் கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக அக்சர் பட்டேல் விளையாடுவதற்கான வாய்ப்புள்ளது.

இறுதி இரண்டு இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் விளையாடுவார்கள் என்றும் தெரிகிறது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும்?

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) சாய் சுதர்சன், 4) சுப்மன் கில், 5) தேவ்தத் படிக்கல், 6) துருவ் ஜுரேல், 7) ரவீந்திர ஜடேஜா, 8) வாஷிங்டன் சுந்தர், 9) அக்சர் படேல், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

- Advertisement -