நாளைய 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்போடு இந்திய அணி தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் முகமது ஷமி, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெறாத வேலையில் காயம் காரணமாக கடந்த முதல் போட்டியில் விளையாடிய கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் வெளியேறி உள்ளதால் இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

- Advertisement -

இவர்களது இடத்தை எவ்வாறு இந்திய அணி நிரப்பும்? இங்கிலாந்து அணியை எவ்வாறு வீழ்த்தப்போகிறது என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த உத்தேச பட்டியலை நாம் இங்கே காணலாம். அந்தவகையில் இந்த போட்டியில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்குவார்கள். அதேபோன்று மூன்றாவது இடத்தில் சுப்மன் கில்லுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. நான்காவது இடத்தில் கே.எல் ராகுலுக்கு பதிலாக ரஜத் பட்டிதார் அறிமுகமாக அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எஸ் பரத் ஆகியோர் விளையாடுவார்கள். சுழற்பந்து வீச்சாளர்களாக 7,8,9 ஆகிய இடங்களில் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெறுவார்கள், வேகப்பந்து வீச்சாளர்களாக 10 மற்றும் 11 ஆவது இடத்தில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர்கள் விளையாடுவார்கள் என்று தெரிகிறது, அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 48 மணிநேரம் அவரால் பேசமுடியாது.. தண்ணீரால் ஏற்பட்ட விபரீதம்.. மாயங்க் அகர்வால் – விடயத்தில் நடந்தது என்ன?

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) ரஜத் பட்டிதார், 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) கே.எஸ் பரத், 7) ரவிச்சந்திரன் அஷ்வின், 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement