
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே விளையாடியது. ஆனால் இந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் சீனியர் வீரர்கள் அணிக்குள் வருவதனால் எந்தெந்த வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த வகையில் இன்றைய இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா ஆகிய வீரர்கள் அணிக்குள் இணைவதனால் நிச்சயம் குறிப்பிட்ட 4 மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. அந்த வகையில் விராட் கோலி அணியில் இணைவதால் தீபக் ஹூடா வெளியேற்றப்படுவது உறுதி. அதேபோன்று ஏற்கனவே தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு வருவதால் ரிஷப் பண்ட் உள்ளே வரும்போது இஷான் கிஷன் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது.
அதேபோன்று ஜடேஜா அணிக்குள் வருவதால் அக்சர் பட்டேல் நீக்கப்படுவார் என்றும் தெரிகிறது. பும்ரா வருவதால் அர்ஷ்தீப் சிங் வெளியேறுவார். இப்படி இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அணிக்குள் நுழைவதால் எந்தெந்த மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரண்டாவது டி20 போட்டி சுவாரஸ்யமாக அமைய உள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான உத்தேச அணியை நாங்கள் கணித்துள்ளோம். அதன்படி இன்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒவ்வொரு நாட்டுக்கு எதிராக அதிக சதங்களை அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியல்
1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ரிஷப் பண்ட், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஹர்ஷல் படேல், 9) புவனேஷ்வர் குமார், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) யுஸ்வேந்திர சாஹல்