நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த டி20 தொடரில் வெற்றி பெறும் முனைப்புடன் தற்போது இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் :
அதோடு 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் கடைசி டி20 தொடர் என்பதினால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று ஜனவரி 21-ஆம் தேதி நாக்பூர் நகரில் துவங்க இருக்கும் இந்த முதலாவது டி20 போட்டியில் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஏனெனில் நியூசிலாந்து தொடரில் இடம் பெறும் வீரர்கள் பெரும்பாலும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் இடம்பெற்று விளையாடுவார்கள் என்பதால் இன்றைய போட்டியில் களமிறங்கும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் வீரர்கள்? குறித்த உத்தேச பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.
அந்த வகையில் இன்றைய முதலாவது டி20 போட்டிக்கான துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாடுவது உறுதி. மூன்றாவது இடத்தில் ஏற்கனவே இஷான் கிஷன் விளையாடுவார் என்பதை கேப்டன் உறுதி செய்துவிட்டார். அதனால் இஷான் கிஷன் மூன்றாவது இடத்திலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்திலும் விளையாடுவார்கள். ஐந்தாவது இடத்தில் துணை கேப்டனான அக்சர் பட்டேல் இடம் பெற வாய்ப்புள்ளது.
6 மற்றும் 7 ஆகிய இடங்களில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களான ஹார்டிக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் இடம் பெறுவார்கள். எட்டாவது இடத்தில் பினிஷராக ரிங்கு சிங் இடம் பெறுவார். 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் முழுநேர வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெறுவார்கள். 11 ஆவது இடத்தில் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி இடம் பெறுவார். அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தி வந்தா மட்டும் தான் இந்திய அணி அந்த விடயத்தில் தப்பிக்கும் – முகமது கைப் கருத்து
1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்ஸன், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) அக்சர் படேல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) ரிங்கு சிங், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) அர்ஷ்தீப் சிங், 11) வருண் சக்கரவர்த்தி.



