IND vs AUS : நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியானது நாளை செப்டம்பர் 20-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற உள்ளது. எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்த டி20 தொடர் நடைபெற உள்ளதால் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற முனைப்பு காட்டும். அதேவேளையில் இந்திய அணிக்கு எதிராக தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்த ஆஸ்திரேலிய அணியும் விரும்பும் இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

INDvsAUS

இந்நிலையில் நாளைய முதல் டி20 போட்டிக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அது குறித்த பதிவை நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி நாளைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் களமிறங்குவார்கள். மூன்றாவது வீரராக விராட் கோலியும், நான்காவது வீரராக சூரியகுமார் யாதவும் விளையாடுவது உறுதி. அதேபோன்று ஆல் ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் விளையாடுவார்கள்.

Hardik Pandya 1

அதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அது தவிர்த்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக ஹர்ஷல் பட்டேல், ஜஸ்ப்ரீத் பும்ரா, தீபக் சாகர் அல்லது புவனேஸ்வர் குமார் ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள்.

- Advertisement -

மேலும் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹல் இடம்பெறுவார். அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 2022 ஐசிசி டி20 உ.கோ தொடரில் முதல் முறையாக விளையாடும் 10 இளம் வீரர்களின் பட்டியல்

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட் / தினேஷ் கார்த்திக், 6) ஹார்டிக் பாண்டியா, 7) அக்சர் பட்டேல், 8) ஹர்ஷல் படேல், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) தீபக் சாகர் / புவனேஷ்வர் குமார், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement