- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய அணி இதுதான் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை நவம்பர் 8-ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் நடைபெற இருக்கிறது.

ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் :

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்கிற முனைப்புடன் ஆஸ்திரேலியா அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் இந்திய அணியும் களமிறங்க இருப்பதினால் இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இரு அணி வீரர்களுமே தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றங்கள் இருக்குமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஆனால் கடைசி போட்டிக்கான இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தற்போது வரை தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏனெனில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தடுமாற்றத்தை சந்தித்திருந்தாலும் அடுத்ததாக நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் மூன்று முக்கிய மாற்றங்களை செய்து அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றது. எனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியிலும் அதே அணி தான் தொடரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக்கொள்ளும் என்பதால் நிச்சயம் இந்த ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 4வது டி20 நடைபெறும் காபா மைதானம் எப்படி? மழை வருமா? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஜிதேஷ் சர்மா, 6) ஷிவம் துபே, 7) அக்சர் படேல், 8) வாஷிங்டன் சுந்தர், 9) வருண் சக்ரவர்த்தி, 10) அர்ஷ்தீப் சிங், 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.

- Advertisement -