- Advertisement -
ஆசிய கோப்பை

பாக் அணிக்கெதிரான சூப்பர் 4 சுற்று போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணியானது இன்று செப்டம்பர் 21-ம் தேதி சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்திய அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் :

ஏற்கனவே இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் விளையாடி வரும் இந்திய அணியானது இந்த சூப்பர் ஃபோர் சுற்றிலும் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. ஏனெனில் அந்த அளவிற்கு இந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அணிகளில் இந்திய அணியை பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதோடு இந்த தொடரில் இந்திய அணியை வீழ்த்தும் சமமான எதிரணி இல்லை என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சூப்பர் 4 சுற்று போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்ற கேள்வி நிலவி வருகிறது.

ஏனெனில் சூப்பர் 4 சுற்று போட்டி இந்திய அணிக்கு முக்கியமான ஆட்டம் என்பதனால் இந்த போட்டியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த போட்டியின் போது ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட வேளையில் இந்த போட்டியில் அவர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அவர்கள் இருவரும் பிளேயிங் லெவனுக்குள் வருவதால் ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியிலிருந்து வெளியேறுவார்கள். மற்றபடி வேறுயெந்த மாற்றமும் இந்திய அணியில் இருக்காது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 7 வருடம் கழித்து.. 8க்கு 8.. பாலை குடித்து விட்டு இலங்கையை பாம்பாக கொத்திய வங்கதேசம்.. சாதனை வெற்றி

1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) வருண் சக்கரவர்த்தி.

- Advertisement -