IND vs SL : இன்றைய 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – பிளேயிங் லெவன் இதோ

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 162 ரன்களை குவிக்க பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

IND vs SL

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது ஜனவரி 5-ஆம் தேதி இன்று புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில் இன்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் குறிப்பிட்ட இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த போட்டியில் விளையாடி காயமடைந்த சஞ்சு சாம்சன் இரண்டாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் கட்டாயம் அவரது இடத்திற்கு யாராவது ஒருவர் அணிக்குள் வந்தாக வேண்டும்.

Rahul-Tripathi

அந்த வகையில் நீண்ட காலமாக தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் பேட்ஸ்மேன் ராகுல் திரிப்பாதி அணியில் இணைய அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோன்று கடந்த போட்டியில் இடம்பெறாத அர்ஷ்தீப் சிங் மீண்டும் இந்த போட்டியில் இடம்பெற வாய்ப்பு இருக்கும். ஆனால் அவர் எந்த வீரருக்கு பதிலாக இடம் பெறுவார் என்று தெரியவில்லை.

- Advertisement -

ஏனெனில் கடந்த போட்டியில் விளையாடிய உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், ஷிவம் மாவி என அனைவருமே சிறப்பாக பந்துவீசியதால் அரஷ்தீப் சிங் இடம் பிடித்தால் உம்ரான் மாலிக் வெளியேறிய வேண்டிய நிலையும் ஏற்படலாம். இந்த குறிப்பிட்ட இரண்டு மாற்றங்களை தவிர்த்து இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : அணிகளின் பயிற்சியாளர் குழுவில் இணைந்து பணியாற்றும் 3 மகளிர்கள் – லிஸ்ட் இதோ

1) இஷான் கிஷன், 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) ராகுல் திரிபாதி, 5) ஹார்டிக் பாண்டியா, 6) தீபக் ஹூடா, 7) அக்சர் படேல், 8) ஹர்ஷல் படேல், 9) ஷிவம் மாவி, 10) உம்ரான் மாலிக் / அர்ஷ்தீப் சிங், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement