IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் புஜாராவின் இடத்தில் ஆடப்போவது யாருன்னு தெரியுமா? – இதுதான் ரிசல்ட்

Pujara
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதனை தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கா நகரில் துவங்க இருக்கிறது.

Pujara-1

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்று குறித்து எதிர்பார்ப்பு அனைவரது எழுந்துள்ளது.

அதிலும் குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுபவ வீரரான புஜாரா அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக எந்த வீரர் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

Jaiswal and Ruturaj

தற்போதைய நிலவரப்படி புஜாராவின் இடத்தில் விளையாட ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் போட்டி போட்டாலும் அந்த இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் புஜாராவின் மூன்றாவது இடத்தில் விளையாடப்போகும் அந்த வீரர் யார்? என்பது நாளை மறுதினம் தெரிந்து விடும், ஏனெனில் இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் கிளப் அணியுடன் ஒரு பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க : Ashes 2023 : அழாதீங்க பால் டப்பா குழந்தையே, வெறித்தனமாக கலாய்த்த ஆஸி பத்திரிகை – பென் ஸ்டோக்ஸ் ரியாக்சன் இதோ

அந்த பயிற்சி போட்டியில் மூன்றாவது வீரராக எந்த பேட்ஸ்மேன் களமிறங்கிறாரோ அவரே முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார் என்பதனால் நாளை மறுதினம் நடைபெறவுள்ள இந்த பயிற்சி போட்டியில் விளையாடும் அந்த வீரரே புஜாராவின் இடத்தை நிரப்புவார் என்பது உறுதி.

Advertisement