IND vs PAK : பாகிஸ்தான் அணிக்கெதிரான சூப்பர்4 போட்டிக்கான இந்திய அணியின் – பிளேயிங் லெவன் இதோ

Rohit-Sharma
- Advertisement -

ஆசியக் கோப்பை தொடரின் “சூப்பர் 4” சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதல் “சூப்பர் 4” சுற்று போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் “சூப்பர் 4” சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

INDvsPAK

- Advertisement -

ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டியில் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதிய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான அணியை வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் மீண்டும் தற்போது “சூப்பர் 4” சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாட இருப்பது அனைவரது மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜாவும், பாகிஸ்தான் அணியிலிருந்து ஷாநவாஸ் தஹானி ஆகியோரும் வெளியேறியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக இந்திய அணியில் அக்சர் பட்டேலும், பாகிஸ்தான் அணியில் ஹசன் அலியும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தங்களது முழு பலத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறது. அதே நேரத்தில் முந்தைய போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணியும் தயாராகி வருகிறது. எனவே இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்கும் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இன்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : வாழ்த்தியது குற்றமா, கோலி – அனுஷ்காவை இரட்டை அர்த்தத்தில் இணைத்த ரசிகருக்கு ஆஸி வீரர் பதிலடி

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் பட்டேல், 8) புவனேஷ்வர் குமார், 9) ஆவேஷ் கான் / அஷ்வின், 10) அர்ஷ்தீப் சிங், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement