வாழ்த்தியது குற்றமா, கோலி – அனுஷ்காவை இரட்டை அர்த்தத்தில் இணைத்த ரசிகருக்கு ஆஸி வீரர் பதிலடி

anushka
- Advertisement -

டெல்லியை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையை வென்று சர்வதேச கிரிக்கெட்டில் சீனியர் அணிக்காக அறிமுகமாகி அப்போதைய கேப்டன் தோனியின் மானசீக ஆதரவைப் பெற்று 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வரும் சூப்பர் ஸ்டாராக போற்றப்படுகிறார். குறிப்பாக 2010 – 2019 வரையிலான காலகட்டத்தில் உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் எதிர்கொண்டு அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக ஆட்டநாயகன் விருதுகள் உட்பட நிறைய வியக்கும் சாதனைகளை படைத்த அவர் 2010 தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் என ஐசிசியால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் இந்திய அளவில் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரராக உருவெடுத்த இவர் பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டதால் இந்தியாவின் உச்சக்கட்ட நட்சத்திரமாக திகழ்கிறார். 33 வயதிலேயே 23000க்கும் மேற்பட்ட ரன்கள் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகிய ஜாம்பவான்களுக்கு அடுத்ததாக 70 சதங்கள் என ஜாம்பவானாக போற்றப்படும் அளவுக்கு திறமையை வெளிப்படுத்தி புகழ் பெற்றுள்ள அவர் 2019க்குப்பின் சுமார் 3 வருடங்களாக 71ஆவது சதத்தை அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

- Advertisement -

வாழ்த்திய வார்னர்:
அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அழுத்தங்களை கொடுத்த கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்து சுதந்திரமாக விளையாட துவங்கியுள்ள அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்து தற்போது ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் புத்துணர்ச்சியுடன் விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த நவீன யுகத்தில் அன்றாட பயன்பாடுகளில் முதன்மையானதாக மாறிவிட்ட சமூக வலைதளங்கள் அனைவரது வாழ்விலும் இன்றியமையாத உருவாகியுள்ளது.

அதில் அவ்வப்போது ஏதாவது வேடிக்கையான சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெறும் நிலையில் தற்போது பிரபலமாக இருப்பவர்கள் தங்களது துறை சம்பந்தப்பட்ட அல்லது தங்களுக்கு மிகவும் பிடித்தவற்றை ஒற்றை வார்த்தையில் ட்வீட் போடுவது ட்ரென்ட்டாக மாறியுள்ளது. குறிப்பாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தமக்கு மிகவும் பிடித்த “கிரிக்கெட்” என்ற வார்த்தையை பதிவு செய்தது ரசிகர்களிடம் புகழ் பெற்றது. அந்த வரிசையில் இணைந்த விராட் கோலி தன்னுடைய மனைவியான அனுஷ்கா சர்மாவின் படத்தை பதிவேற்றி “என்னுடைய உலகம் மற்றும் இதயம்” என்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

அதற்கு பதிலளித்த ஆஸ்திரேலியாவை நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் “நீங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர், நண்பரே” என்று பதிலளித்திருந்தார். ஆனால் வழக்கம் போல சில விஷம நபர்கள் வார்னர் இரட்டை அர்த்தத்தில் விராட் கோலிக்கு பதிலளித்துள்ளதாக வதந்திகளை கொளுத்திப் போட்டனர். இருப்பினும் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய சினிமா பாடல்களுக்கு நடனமாடி ஏராளமான இந்தியர்களை ரசிகர்களாக கொண்டுள்ள வார்னர் தவறான அர்த்தத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை என்று நிறைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர்.

ஆனாலும் தொடர்ச்சியாக சில தவறான கருத்துக்கள் வந்ததால் அதிருப்தியடைந்த டேவிட் வார்னர் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க அது போன்ற கருத்துக்களை தெரிவித்த நபர்களுக்கு கொடுத்த பதிலடிகள் பின்வருமாறு. “கிரிக்கெட் வீரர்களான எங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய மனைவிகளை பெறுவதற்கு மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளோம். நாங்கள் ஆஸ்திரேலியாவில் இவ்வாறுதான் பொதுவாக சொல்வோம். அதாவது நான் எனது மனைவி கேண்டீஸ் வார்னரை பெறுவதற்கு மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளேன் என்று கூறுவேன்.

- Advertisement -

எனவே அதையே மற்றவர்களிடம் கூறும்போது “நீங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளீர்கள், நண்பரே” அல்லது “நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நண்பரே” என கூறிவோம்” என்று பதிலளித்தார். அதை பார்த்த ரசிகர்கள் இது போன்ற சில வேலையற்ற நபர்களுக்கு வதந்திகளைக் கிளப்பவது தான் வேலை என்பதால் அவர்களுக்காக நீங்கள் ஏன் மெனக்கெட்டு பதில் அளிக்கிறீர்கள் என்று வார்னருக்கு ஆதரவு தருகின்றனர்.

இதையும் படிங்க : IND vs PAK : சூப்பர் 4 ஆட்டத்திற்கு முன்னதாக மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக விலகல் – வெளியான தகவல்

அது போக நல்ல இதயம் கொண்டு வாழ்த்திய டேவிட் வார்னருக்கு விராட் கோலியே நேரடியாக “எனக்கு தெரியும் நண்பரே” என்று பதிலளித்துள்ளார். மொத்தத்தில் களத்தில் இறங்கி விளையாடுவதற்கு களத்திற்கு வெளியே இருந்து ஆதரவு கொடுக்கும் மனைவிகளை இதுபோன்ற சூப்பர் ஸ்டார் வீரர்கள் அதிர்ஷ்டமாக நினைப்பது அவர்களது நல்ல மனதை காட்டுகிறது என்று கூறலாம்.

Advertisement