INDvsNZ T20 : இன்றைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

rohith
- Advertisement -

நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த இந்திய அணியானது அடுத்ததாக இன்று துவங்கவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே உலக கோப்பை தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து கோலியும், பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவிசாஸ்திரி விலகி உள்ளதால் இந்த தொடரில் இருந்து கேப்டனாக ரோகித் சர்மாவும், பயிற்சியாளராக டிராவிட்டும் செயல்படுகின்றனர். இதன் காரணமாக தற்போது இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

dravid

- Advertisement -

அதுமட்டுமின்றி சீனியர் வீரர்கள் சிலர் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ள வேளையில், இளம் வீரர்கள் பலர் இந்த புது அணியில் விளையாட உள்ளதால் இந்த போட்டியில் கூடுதல் சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்த புதிய இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறுப்போகும் வீரர்கள் யார் ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவனை நாங்கள் உங்களுக்காக உத்தேசமாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி கேப்டன் ரோகித் மற்றும் துணை கேப்டன் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். மூன்றாவது வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என்று தெரிகிறது. அதேபோன்று மிடில் ஆர்டரில் 4வது மற்றும் 5வது இடத்தில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் களம் இறங்குவார்கள். ஆறாவது இடத்தில் ஆல்-ரவுண்டராக தேர்வாகிய வெங்கடேஷ் ஐயர் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

rohith

மேலும் 5 பந்துவீச்சாளர்களில் சுழற்பந்து வீச்சாளர்களாக அஷ்வின் மற்றும் சாஹல் ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளர்களில் தீபக் சஹர், முகமது சிராஜ் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் விளையாட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : கிரிக்கெட் வீரர்கள் ஒன்னும் மெஷின் கிடையாது. கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க – புதுக்கேப்டன் ரோஹித் பேட்டி

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) சூர்யகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) வெங்கடேஷ் ஐயர், 7) ரவிச்சந்திரன் அஷ்வின், 8) யுஸ்வேந்திர சாஹல், 9) தீபக் சாஹர், 10) முகமது சிராஜ், 11) புவனேஷ்வர் குமார்

Advertisement