IND vs WI : நாளைய 2ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்த டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஆகஸ்ட் 6-ஆம் தேதி கயானா நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்த உத்தேச பிளேயிங் லெவன் பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி முதல் டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதல் போட்டியில் அடைந்து தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக மீண்டும் அதே இந்திய அணியே களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு முதல் போட்டியிலேயே வெற்றி வாய்ப்புக்கான நல்ல நிலையில் இருந்தும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளதால் நிச்சயம் அணியில் எந்த ஒரு மாற்றமும் இன்றி அதே வீரர்களுடன் தான் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : அந்த வேலைய மட்டும் இந்தியா செய்யாம இருந்தா, அடித்து நொறுக்கி நாங்க ஜெயிப்பது உறுதி – இளம் இங்கிலாந்து வீரர் சவால் பேட்டி

1) சுப்மன் கில், 2) இஷான் கிஷன், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) ஹர்டிக் பாண்டியா, 6) சஞ்சு சாம்சன், 7) அக்சர் படேல், 8) குல்தீப் யாதவ், 9) யுஸ்வேந்திர சாஹல், 10) அர்ஷ்தீப் சிங், 11) முகேஷ் குமார்.

Advertisement