- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றனர். அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் துவங்க இருக்கிறது.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் :

இந்த போட்டிக்கான இரு அணிகளும் தற்போது பிரிஸ்பேன் நகர் சென்றடைந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த முறை இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியை ருசித்ததால் இம்முறை மீண்டும் அந்த மைதானத்தில் வெற்றி பெற கடுமையான முயற்சியை வெளிப்படுத்தும்.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணியை பழி தீர்க்கும் விதமாக இந்த மைதானத்தில் வீழ்த்த ஆஸ்திரேலிய அணியும் முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த உத்தேச பட்டியலை இங்கு காணலாம்.

அந்த வகையில் நாளைய இந்த போட்டியிலும் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரே துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். அதே போன்று மூன்றாவது இடத்தில் சுப்மன் கில்லும், நான்காவது இடத்தில் விராட் கோலி, ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட்டும் விளையாடுவார்கள். ஆறாவது இடத்தில் கேப்டன் ரோகித் சர்மாவும், ஏழாவது இடத்தில் நிதீஷ் ரெட்டியும் விளையாடுவார்கள்.

- Advertisement -

சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்வார் என்று தெரிகிறது. மேலும் 3 வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் ஹர்ஷித் ராணாவிற்கு பதிலாக ஆகாஷ் தீப் இந்த போட்டியில் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அதை முழுசா மறந்துட்டோம்.. இதை செஞ்சு 2 போட்டிகளை ஜெய்ப்போம்.. இந்தியாவின் புதிய திட்டம் பற்றி கில் பேட்டி

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) ரிஷப் பண்ட், 6) ரோஹித் சர்மா, 7) நிதீஷ் ரெட்டி, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) முகமது சிராஜ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) ஆகாஷ் தீப்.

- Advertisement -