நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது துபாய் நாட்டில் நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது தாங்கள் விளையாடிய முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. இவ்வேளையில் இந்த தொடரின் குரூப் ஏ சுற்றில் தங்களது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து மார்ச் 2-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

நியூசிலாந்து அணிக்கெதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் :

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று முதல் அணியாக தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்போடு தற்போது இந்திய அணியின் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படி மாற்றங்களுடன் கூடிய இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்த தொகுப்பை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் இந்த கடைசி போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மாற்றமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்படுவதற்காக தெரிகிறது. அதேபோன்று மற்றொரு மாற்றமாக முகமது ஷமிக்கு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் இடம் பெறலாம் என்று தெரிகிறது. அந்த இரண்டு மாற்றங்களை தவிர இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வேறு மாற்றங்கள் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஒருவேளை அப்படி ரோஹித் சர்மா ஓய்வெடுக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக சுப்மன் கில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவார் என்று தெரிகிறது. ரோகித் சர்மா வெளியேறினால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் துவக்க வீரராகவும், ரிஷப் பண்ட் பின்வரிசையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : நியூஸிலாந்து அணிக்கெதிரான போட்டியில் ஏற்படவுள்ள 2 முக்கிய மாற்றங்கள் – வெளியான தகவல்

அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ : 1) கே.எல் ராகுல், 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) ஹர்ஷித் ராணா, 11) அர்ஷ்தீப் சிங்.

Advertisement