நடப்பு 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கடைசி லீக் ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு எதிராக துபாய் சர்வதேச மைதானத்தில் மார்ச் 2-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை எளிதில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்திருந்தது.
நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் ஏற்படவுள்ள மாற்றம் :
இந்திய அணி இப்படி முதல் இரண்டு போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ததால் எஞ்சியுள்ள கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முக்கிய இரண்டு மாற்றங்கள் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிகழ வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டிக்கு பிறகு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்ப்பட்டதாக கூறியிருந்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான அடுத்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்று வரும் பயிற்சியில் கூட அவர் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியது.
இதன் காரணமாக எதிர்வரும் இறுதி கட்ட போட்டிகளை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா இந்த கடைசியில் போட்டியில் ஓய்வெடுத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக கே.எல் ராகுல் துவக்க வீரராக விளையாட வாய்ப்புள்ளது. அதேவேளையில் ரோகித் சர்மாவிற்கு மாற்று வீரராக ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட வாய்ப்புள்ளது.
அதேபோன்று இரண்டாவது முக்கியமான மாற்றமாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் விளையாடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் அடுத்த போட்டியில் கண்டிப்பா பிளெயிங் லெவனில் விளையாடனும் – காரணத்தை கூறிய முகமது கைப்
ஏனெனில் முகமது ஷமி கடந்த போட்டியின் போது அடிக்கடி போட்டியின் இடையே ஓய்வறைக்கு சென்று மருத்துவ உதவி பெற்றதோடு காலில் அசகரியத்தையும் உணர்ந்ததால் அவரது உடற்குதியை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. எனவே அடுத்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் முகமது ஷ0மி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரிஷப் பண்ட் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது.



