IND vs WI : நாளைய 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த டி20 தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது அதே மொமென்டத்துடன் நான்காவது போட்டியிலும் வெற்றி பெற ஆயத்தமாகி வருகிறது.

- Advertisement -

அதேவேளையில் நாளைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தயாராகி வருவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

நாளை அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த உத்தேச பட்டியலை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளதால் நாளைய நான்காவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாளைய நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் இன்ஸ்டராகிமில் ஒரு போஸ்ட் போட – வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

1) சுப்மன் கில், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) ஹார்டிக் பாண்டியா, 6) சஞ்சு சாம்சன், 7) அக்சர் படேல், 8) முகேஷ் குமார், 9) குல்தீப் யாதவ், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) அர்ஷ்தீப் சிங்.

Advertisement