- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தெ.ஆ அணிக்கு எதிரான 4 ஆவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது டிசம்பர் 17-ஆம் தேதியான இன்று லக்னோ நகரில் நடைபெற இருக்கிறது.

நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணி இதுதான் :

இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் தென்னாப்பிரிக்கா அணியும் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பதை இந்த பதிவில் காணலாம்.

அந்த வகையில் கடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதால் இந்த போட்டியில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் மூன்றாவது போட்டியின் போது தனது வீட்டிற்கு சென்றிருந்த பும்ரா இன்னும் அணிக்கு திரும்பாததால் அவர் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

- Advertisement -

அதனால் பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா தொடர்ந்து விளையாடுவார். அதேபோன்று அக்சர் பட்டேலும் இந்த தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிகிறது. அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 4-ஆவது போட்டியிலும் பும்ரா விளையாட வாய்ப்பில்லை.. எப்போது அணிக்கு திரும்புவார்? – வெளியான தகவல்

1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) ஜிதேஷ் சர்மா, 8) ஹர்ஷித் ராணா, 9) குல்தீப் யாதவ், 10) அர்ஷ்தீப் சிங், 11) வருண் சக்கரவர்த்தி.

- Advertisement -