IND vs WI : நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Dhawan-IND-Team
- Advertisement -

இங்கிலாந்து தொடரினை முடித்துள்ள இந்திய அணியானது தற்போது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி நாளை துவங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டனாக ஷிகார் தவான் ஏற்கனவே நியமிக்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

INDvsWI

- Advertisement -

இந்த ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களான விராத் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தவான் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த ஒருநாள் தொடரில் விளையாடும் என்பதனால் இந்த ஒருநாள் தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

அதன்படி ஜூலை 22 ஆம் தேதி நாளை இரவு இந்திய நேரப்படி 7 மணிக்கு முதல் ஒருநாள் போட்டியானது டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனின் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்த இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Hardik Pandya 1

இந்நிலையில் நாங்கள் இங்கே உத்தேசமாக தொகுக்கப்பட்ட பிளேயிங் லெவனை வழங்கியுள்ளோம். அதன்படி நாளைய போட்டியில் துவக்க வீரர்களாக தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அதேபோன்று மூன்றாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனும், நான்காம் இடத்தில் தீபக் ஹூடா ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும், ஆல் ரவுண்டுகளாக 7 மற்றும் 8-ஆவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பிடிப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர்களாக ஆவேஷ் கான் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளராக சாஹல் ஆகியோரும் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அதன்படி நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையில் விளையாட தகுதியான இந்திய விக்கெட் கீப்பரை தேர்வு செய்த ரிக்கி பாண்டிங் – யார்னு பாருங்க

1) ஷிகார் தவான், 2) ருதுராஜ் கெய்க்வாட், 3) இஷான் கிஷன், 4) தீபக் ஹூடா, 5) சூரியகுமார் யாதவ், 6) ஷ்ரேயாஸ் ஐயர், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) ஆவேஷ் கான், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) பிரசித் கிருஷ்ணா

Advertisement