- Advertisement -
ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது தோல்வியையே சந்திக்காமல் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் :

அதன்பின்னர் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றிலும் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாளை செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற இருக்கும் மாபெரும் இறுதி போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதன் காரணமாக அங்கு இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் நாளைய இறுதிப் போட்டியில் இந்திய அணியில் நிச்சயம் 2 முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது.

அந்த வகையில் கடந்த போட்டியின் போன்று ஓய்வளிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே ஓமன் அணிக்கு எதிரான போட்டியிலும் இதேபோன்று முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு மீண்டும் அவர்கள் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்திற்கு திரும்பி இருந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இலங்கை அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் ஓய்வு பெற்ற அவர்கள் இருவருமே மீண்டும் இறுதிப் போட்டியில் அணியுடன் இணைவார்கள். மற்றபடி வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : சர்வதேச டி20 அரங்கில் இரண்டாவது அணியாக இந்திய அணி நிகழ்த்திய அபார சாதனை – விவரம் இதோ

1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) சிவம் துபே, 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) வருண் சக்கரவர்த்தி.

- Advertisement -