ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் :
இந்த அசத்தலான இந்த வெற்றியின் மூலம் தற்போது இந்திய அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனைத்தொடர்ந்து நாளை செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
கான்பூர் நகரில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் நாளைய இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம் என்பது குறித்தும் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்று குறித்தும் தகவலை இங்கு காணலாம்.
அதன்படி நாளைய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் துவக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர்களே விளையாடுவார்கள். மூன்றாவது இடத்தில் வழக்கம் போல் சுப்மன் கில்லும் நான்காவது இடத்தில் விராட் கோலியும் விளையாடுவார்கள். ஐந்தாவது இடத்தில் கே.எல் ராகுல், ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பிடிப்பார்கள்.
ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் விளையாடுவார்கள். கான்பூர் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இடம்பெற வாய்ப்பு உள்ளது. அதனை தவிர்த்து இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் விளையாடுவார்கள். அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : சுப்மன் கில் கிடையாது.. ரோஹித்துக்கு பின் இவர் தான் இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக தகுதியானவர்.. டேனிஷ் கனேரியா
1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) கே.எல் ராகுல், 6) ரிஷப் பண்ட், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.



