சுப்மன் கில் கிடையாது.. ரோஹித்துக்கு பின் இவர் தான் இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக தகுதியானவர்.. டேனிஷ் கனேரியா

Danish kaneria
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 37 வயதை தாண்டியுள்ளார். அதனால் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர் ஏற்கனவே 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்ட பிசிசிஐ சூரியகுமார் யாதவை புதிய டி20 கேப்டனாக அறிவித்தது.

அதை விட சுப்மன் கில் சமீப காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் பேட்டிங்கில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் அவரை ஆல் ஃபார்மட் வீரராக பார்ப்பதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் கூறினார். எனவே அவரை இந்தியாவின் வருங்கால கேப்டனாக வளர்ப்பதற்காகவே தற்போது துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளதாக அஜித் அகர்கர் கூறியிருந்தார்.

- Advertisement -

சுப்மன் கில் வேண்டாம்:

இருப்பினும் சமீபத்திய ஜிம்பாப்வே டி20 தொடரில் அபிஷேக் ஷர்மாவுக்கு ஓப்பனிங் இடத்தை கொடுத்தாக சுப்மன் கில் சுயநலத்துடன் நடந்து கொண்டார். எனவே அவர் இந்திய அணினின் கேப்டனாக கூடாது என்பதே நிறைய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு பின் ரிஷப் பண்ட் இந்தியாவின் கேப்டனாக தகுதியானவர் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஐஏன்எஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் கேப்டனாக சிறந்த தேர்வு என்று நான் நம்புகிறேன். முதலில் அவர் விவேகமான விக்கெட் கீப்பர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அற்புதமான வீரர். டெஸ்ட் போட்டிகளில் அவர் இயற்கையாக அதிரடியாக விளையாடும் விதமும் பவுலர்களுடன் தொடர்பு கொள்ளும் விதமும் நன்றாக இருக்கிறது”

- Advertisement -

கேப்டன் ரிஷப் பண்ட்:

“எனவே அவர் இந்திய அணியின் கேப்டனாக சிறந்தவராக இருப்பார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே ரிஷப் பண்ட் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பதிவு செய்த 2021 காபா வெற்றியில் 89* ரன்கள் குவித்த அவர் சவாலான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா – வங்கதேசம் 2வது டெஸ்ட் குறுக்கே வரும் மழை.. போட்டி நடக்குமா? கான்பூர் வெதர் ரிப்போர்ட்

மேலும் காயத்திலிருந்து மீண்டும் குணமடைந்து தற்போது கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். எனவே டெஸ்ட் அணியில் இன்றியமையாத வீரராக உருவெடுத்துள்ள அவர் கேப்டனாகும் தகுதியைக் கொண்டுள்ளார். தற்போது 26 வயது மட்டுமே நரம்பியுள்ள ரிஷப் பண்ட் தம்முடைய பேட்டிங்கை போல கேப்டனாகவும் இந்திய டெஸ்ட் அணியை அதிரடியாக வழி நடத்துவதற்கு வாய்ப்புள்ளது.

Advertisement