இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியானது தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது t20 போட்டி நாளை செப்டம்பர் 23-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் வெற்றியை பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்போடு விளையாட இருக்கிறது.
அதேவேளையில் ஆஸ்திரேலியா அணி மீண்டும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாட இருப்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த தகவலையே இந்த பதிவில் நாம் காண உள்ளோம்.

அதன்படி நாளைய போட்டியில் இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பண்ட் இடது கை பேட்ஸ்மேனாக அணிக்குள் இணைவார் என்று கூறப்படுகிறது. அதே போன்று கடந்த போட்டியில் பந்துவீச்சில் மோசமாக செயல்பட்ட உமேஷ் யாதவுக்கு பதிலாக மீண்டும் பும்ரா அணியில் இணைவார் என்று தெரிகிறது.
மேலும் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இதன் காரணமாக நிச்சயம் நாளைய போட்டியில் மூன்று மாற்றங்கள் இந்திய அணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : இந்திய வீரர்கள் தொடர் தோல்வியை சந்திக்க இதுவே காரணம் – முன்னாள் பாக் வீரர் சல்மான் பட் விளாசல்
1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக்கு பாண்டியா, 7) அக்சர் படேல், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) பும்ரா, 10) ஹர்ஷல் படேல், 11) புவனேஷ்வர் குமார்.



