IND vs WI : முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகம் – கேப்டன் ரோஹித் சர்மா அறிவிப்பு

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 12-ஆம் தேதி இன்று டோமினிக்கா நகரில் சற்று முன்னர் துவங்கியது. இந்திய நேரப்படி போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் சற்று முன்னர் நடைபெற்ற டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

IND vs WI

- Advertisement -

அதன் காரணமாக இந்திய அணி தற்போது முதலில் பந்துவீச தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த முதலாவது போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த முதலாவது போட்டியில் இந்திய அணிக்காக இரண்டு வீரர்கள் அறிமுகமாவதை கேப்டன் ரோகித் சர்மா உறுதி செய்துள்ளார்.

அந்த வகையில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக ஜெய்ஸ்வால் விளையாடுவார் என்று ஏற்கனவே அவர் அறிவித்திருந்த வேளையில் இன்று அவர் தனது கைகளாலே ஜெய்ஸ்வாலுக்கு அறிமுக டெஸ்ட் கேப்பை வழங்கி கவுரவித்தார்.

Jaiswal and Ishan Kishan

அதேபோன்று மற்றொரு வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ் பரத்திற்கு பதிலாக இடது கை அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் அறிமுகமானார். அவருக்கு இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலி அறிமுக தொப்பையை வழங்கி கௌரவப்படுத்தினார்.

- Advertisement -

மற்றபடி வேறுயெந்த மாற்றமும் இந்திய அணியில் செய்யப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவும், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs WI : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிடையாது. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை எந்த சேனலில் பாக்கலாம் – என்ன டைம்? (விவரம் இதோ)

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) அஜின்க்யா ரஹானே, 6) இஷான் கிஷன், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) முகமது சிராஜ், 10) ஷர்துல் தாகூர், 11) ஜெய்தேவ் உனட்கட்.

Advertisement