IND vs RSA : கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – என்னென்ன மாற்றம்

INDvsRSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 9-ஆம் தேதி துவங்கியது. இந்த தொடரின் முதல் 4 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று 2 – 2 என்கிற கணக்கில் தற்போது தொடரானது சமநிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து இன்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் உள்ளது.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்று ரசிகர்களும், விமர்சகர்களும் கருதுகிறார்கள். ஏனெனில் பவுண்டரி அளவுகளின் அடிப்படையில் பெங்களூரு மைதானம் மிகச்சிறியது என்பதால் அணியில் இரண்டு லெக் ஸ்பின்னர்கள் இருப்பது ஆபத்து என்றும் பேட்ஸ்மேன்கள் அவர்களுக்கு எதிராக அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ளதால் ஒரு ஆப் ஸ்பின்னரை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கருத்துக்கள் அதிக அளவில் உலவி வருகின்றன.

இருப்பினும் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் எப்போதும் இந்திய அணி ஒரு நிலையான அணியாகவே விளையாடி வருகிறது. அதோடு தொடரின் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றி இருந்தால் கடைசி இரண்டு போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க பட்டிருக்கலாம். ஆனால் தற்போது தொடரானது இரு அணிகளுக்குமே சம நிலையில் உள்ளதால் இந்த போட்டியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.

Shreyas Iyer IND

அதோடு கடைசியாக விளையாடிய இந்திய அணியே இந்த போட்டியிலும் விளையாடும் என்று தெரிகிறது. ஏற்கனவே முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதனால் இன்றைய போட்டியிலும் நிச்சயம் வாய்ப்பு மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதனால் முதல் 4 போட்டிகளில் விளையாடிய அதே அணியே விளையாடும் என்பது உறுதியாகியுள்ளது. அதன்படி கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs RSA : டி20 உலககோப்பை ரேஸில் பண்ட்டை முந்தி விட்டார் – தினேஷ் கார்த்திக்க்கு தெ.ஆ ஜாம்பவான் ஆதரவு

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) இஷான் கிஷன், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) ரிஷப் பண்ட், 5) தினேஷ் கார்த்திக், 6) ஹார்திக் பாண்டியா, 7) அக்சர் பட்டேல், 8) ஹர்ஷல் படேல், 9) புவனேஷ்வர் குமார், 10) ஆவேஷ் கான், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement