IND vs RSA : டி20 உலககோப்பை ரேஸில் பண்ட்டை முந்தி விட்டார் – தினேஷ் கார்த்திக்க்கு தெ.ஆ ஜாம்பவான் ஆதரவு

RIshabh Pant Dinesh Karthik
- Advertisement -

இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த தொடரின் முக்கியமான 4-வது போட்டி ஜூன் 17-ஆம் தேதியான நேற்று ராஜ்கோட் நகரில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169/6 ரன்களை போராடி சேர்த்தது. ருதுராஜ் 5 (7) இஷான் கிசான் 27 (26) ஷ்ரேயஸ் ஐயர் 4 (2) ரிஷப் பண்ட் 17 (23) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 81/4 என தடுமாறிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 46 (31) ரன்களும் தினேஷ் கார்த்திக் 55 (27) ரன்கள் எடுத்து காப்பாற்றினர்.

IND vs RSA Pant Chahal

- Advertisement -

அதை தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 16.5 ஓவரில் 87/9 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் பவுமா காயத்தால் விலகிய நிலையில் குயின்டன் டி காக், மில்லர், க்ளாஸென் போன்ற முக்கிய பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக வேன் டெர் டுஷன் 20 (20) ரன்கள் எடுத்தார்.

மிரட்டும் டிகே:
அதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா 2 – 2* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து கடைசி போட்டியில் வென்று கோப்பையை வெல்ல தயாராகியுள்ளது. இந்த 4-வது போட்டியில் இந்தியா தவித்த வேளையில் அற்புதமாக பேட்டிங் செய்து தனது முதல் அரை சதத்தை பதிவு செய்து 55 ரன்கள் குவித்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2004இல் அறிமுகமாகி எம்எஸ் தோனி இருந்ததால் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறாத இவர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தில் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக 330 ரன்களை 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்க விட்டார்.

Dinesh Karthik vs RSA

அதனால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தாமாக 3 வருடங்கள் கழித்து தேடி வந்துள்ளதை கச்சிதமாக பயன்படுத்தி வரும் அவர் இந்த தொடரில் இதுவரை நடந்த 4 போட்டிகளில் 92 ரன்களை 158.6 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இதனால் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் தேர்வாவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

முந்திட்டாரு:
இருப்பினும் முதன்மை இளம் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருப்பதாலும் இஷான் கிசான், கேஎல் ராகுல் போன்ற இளம் பேக் அப் விக்கெட் கீப்பர்கள் அணியில் இருப்பதாலும் டி20 உலக கோப்பையில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் 36 வயதை கடந்துள்ள தினேஷ் கார்த்திக்க்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஒரு அதிரடியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டை விட பன்மடங்கு உயர்ந்துள்ளதாக தினேஷ் கார்த்திக்கை பாராட்டியுள்ள தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் டி20 உலக கோப்பையில் அவர் விளையாட தகுதியானவர் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

Steyn

இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் பண்ட்க்கு 4 வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அவர் அதில் திரும்பத் திரும்ப செய்த தவறையே செய்து வருகிறார். மேலும் ஒரு நல்ல வீரர் தவறிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்வார் என்று கூறுவார்கள். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. மறுபுறம் ஒவ்வொரு முறையும் அபாரமாக செயல்படும் தினேஷ் கார்த்திக் தாம் ஒரு க்ளாஸ் பிளேயர் என்று நிரூபிக்கிறார். என்னைப் பொறுத்தவரை நீங்கள் உலக கோப்பையை வெல்ல வேண்டுமெனில் அதை தொடும் அளவுக்கு நல்ல பார்மில் இருக்கும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்”

- Advertisement -

“அது யாராக இருந்தாலும் அற்புதமான பார்மில் இருந்தால் அவரை நீங்கள் தேர்வுசெய்யலாம். நிறைய அணிகள் பெயரை வைத்து தேர்வு செய்கின்றன. ஆனால் தினேஷ் கார்த்திக் அற்புதமான பார்மில் உள்ளார். அவர் இதை தொடர்ந்தால் ஆஸ்திரேலியாவுக்கான இந்திய அணி விமானத்தில் அவரின் பெயர் முதலாவதாக இருக்கும். அவர் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றமடைகிறார். போட்டியை படிக்கக் கூடிய அளவுக்கு விக்கெட் கீப்பிங் மன நிலமையும் அவரிடம் உள்ளது. பந்துவீச்சாளர்கள் என்ன செய்வார்கள் என்பதை புரிந்து வைத்து அதற்கேற்றார் போல் செயல்படுகிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs RSA : இந்திய அணியின் எழுச்சிக்கு இவர்தான் தான் காரணம் – வெற்றிக்குப்பின் நெகிழும் இந்திய வீரர்கள்

அதாவது உலக கோப்பையை வெல்வதற்கு பெரிய பெயரை வாங்கியுள்ள ரிஷப் போன்ற வீரர்களை தேர்வு செய்யாமல் தினேஷ் கார்த்திக் போன்ற உலக கோப்பையை வென்று கொடுக்கக்கூடிய நல்ல பார்மில் இருக்கும் வீரர்களை தேர்வு செய்யுமாறு இந்திய நிர்வாகத்துக்கு டேல் ஸ்டைன் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement