IND vs RSA : இந்திய அணியின் எழுச்சிக்கு இவர்தான் தான் காரணம் – வெற்றிக்குப்பின் நெகிழும் இந்திய வீரர்கள்

Dravid
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளதால் 2 – 2* என சமனில் உள்ள இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது போட்டி ஜூன் 19இல் நடைபெற உள்ளது. முன்னதாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கிய இந்தியாவுக்கு முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்த தென்னாப்பிரிக்கா 12 உலக சாதனை வெற்றிகளுடன் வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை சொந்த மண்ணில் தடுத்து நிறுத்தி ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது.

IND vs RSA Pant Chahal

- Advertisement -

அதனால் கடும் பின்னடைவுக்கு உள்ளான இந்திய அணி சொந்த மண்ணில் தலைகுனிவுக்கு உள்ளானது. அந்த நிலைமையில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர்ந்து நடக்க வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது போட்டியில் கொதித்தெழுந்த இந்தியா பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கச்சிதமாக செயல்பட்டு 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் ராஜ்கோட் நகரில் மீண்டுமொரு வாழ்வா – சாவா போட்டியில் அதைவிட அசத்தலாக செயல்பட்ட இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் வீழ்ந்து விட மாட்டோம் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு காட்டியுள்ளது.

மாற்றமில்லா வெற்றி:
முதல் 2 போட்டிகளில் இந்தியாவின் பேட்டிங் ஓரளவு சிறப்பாக இருந்த போதிலும் பந்து வீச்சுதான் படுமோசமாக அமைந்தது. அதனால் 3-வது போட்டியில் நிச்சயமாக சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய உம்ரான் மாலிக் அல்லது அர்ஷிதீப் சிங்கிற்கு வாய்ப்பு அளிக்குமாறு பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டனர். ஆனாலும் முதல் போட்டியிலேயே தேர்வு செய்யப்பட்ட 11 பேரும் தரமானவர்கள் என்பதால் அவர்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்த அணி நிர்வாகம் எந்த மாற்றமும் செய்யாமல் வாய்ப்பையும் ஆதரவையும் வழங்கியது.

Avesh Khan 2

அதை உணர்ந்த இந்திய பவுலர்கள் 3-வது போட்டி முதல் பொறுப்புடன் ஆரம்பம் முதலே துல்லியமாகவும் சிறப்பாகவும் பந்துவீசி அடுத்தடுத்த வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி ஆதரவளித்த இந்திய நிர்வாகத்துக்கு நம்பிக்கையின் பாத்திரமாக செயல்பட்டனர். பொதுவாகவே ஒருசில போட்டிகளில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கூட சொதப்புவது சகஜமானது என்பதால் அவர்களுக்கு வாய்ப்பையும் ஆதரவையும் வழங்கினால் இருமடங்கு வெற்றிகளை தேடித் தருவார்கள் என்பதை இந்த தென் ஆப்ரிக்க தொடரில் இந்திய வீரர்கள் நிரூபித்துள்ளனர்.

- Advertisement -

காரணம் டிராவிட்:
இந்நிலையில் 3, 4 ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்களிடையே ஏற்பட்ட எழுச்சிக்கு தோல்வியிலும் நம்பிக்கை வைத்து ஆதரவை வழங்கிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் காரணம் என்று முதல் 3 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்காத போதிலும் 4-வது போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இளம் வீரர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “4 போட்டிகளில் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே பாராட்டு அனைத்தும் டிராவிட் சாருக்கு செல்ல வேண்டும். அவர் அனைவருக்கும் தேவையான அதிகப்படியான வாய்ப்புகளை வழங்கினார்”

dravid

“ஒருசில சொதப்பல்களுக்காக அவர் யாரையும் நீக்கவில்லை. ஏனெனில் ஒரு சில போட்டிகளில் ஒரு வீரரின் செயல்பாட்டை மதிப்பிட முடியாது. என் மீது மிகப்பெரிய அழுத்தம் இருந்தது. காரணம் முதல் 3 போட்டியில் நான் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இருப்பினும் அணி நிர்வாகம் அளித்த மற்றொரு வாய்ப்பில் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். மேலும் இன்று என்னுடைய தந்தையின் பிறந்த நாள் என்பதால் இதை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

டிகே பாராட்டு:
அதேபோல் தோல்வி அடைந்தாலும் மாற்றங்களை செய்யாத ராகுல் டிராவிட் இருப்பதால் தாம் உட்பட அணியில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உணர்வதாக கூறும் தமிழக நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் அதுவே களத்தில் அனைத்து வீரர்களும் நிம்மதியாக செயல்பட வைத்து வெற்றி பெற உதவியதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ராகுல் பாய்’க்கு பாராட்டுக்கள் சொல்ல வேண்டும். அவர் இருப்பதால் அணி அமைதியாக உள்ளது. இந்திய அணி தற்போது பாதுகாப்பாகவும் அமைதியானதாகவும் உள்ளது”

இதையும் படிங்க : வீடியோ : சிக்ஸர் அடித்ததால் புதருக்குள் சென்று தேடிய வீரர்கள் – சர்வதேச கிரிக்கெட்டிலும் இப்படி ஒரு நிலையா?

“தற்போது முடிவு நமக்கு சாதகமாக வந்தாலும் இல்லை என்றாலும் ஒரே மாதிரியான சூழ்நிலை நிலவுகிறது. இருப்பினும் அழுத்தத்தை தாங்கி சிறப்பாக செயல்பட வேண்டியதை கற்றுக் கொள்வது மிகவும் முக்கியமாகும்” என்று கூறினார். இப்படி அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதால் முதல் 4 போட்டிகளிலேயே மாற்றம் செய்யாத காரணத்தால் நிச்சயமாக 5-வது போட்டியில் இந்திய அணியில் மாற்றம் நிகழாது என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement