IND vs SL : இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

INDvsSL
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது சமீபத்தில் பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. அதன்பின்னர் தற்போது நாடு திரும்பியுள்ள இந்திய அணியானது அடுத்ததாக இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை இந்தியாவிலேயே நடைபெறயிருக்கிறது.

இந்த தொடருக்கான டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் அடுத்தாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

அதன்படி இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் இடம்பெறாத ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல், முகமது ஷமி போன்றோர் இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் அணிக்கு திரும்புகின்றனர். இந்த ஒருநாள் தொடரிலும் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணைக்கேப்டனாக ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சமீபத்தில் வங்கதேச அணிக்கெதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் இரட்டைசதம் அடித்து வரலாற்று சாதனை படைத்த இஷான் கிஷனுக்கும் இடம் கிடைத்துள்ளது.

- Advertisement -

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேபோன்று அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், முகமது சிராஜ் போன்றோரும் இடம்பிடித்துள்ளது இந்திய அணிக்கு வலுசேர்த்துள்ளது. அதன்படி இந்த ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய ஒருநாள் அணி இதோ :

இதையும் படிங்க : IND vs SL : இலங்கை அணிக்கெதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

1) ரோஹித் சர்மா, 2) ஹார்டிக் பாண்டியா, 3) சுப்மன் கில் 4) விராட் கோலி, 5) சூரியகுமார் யாதவ், 6) ஷ்ரேயாஸ் ஐயர், 7) கே.எல் ராகுல், 8) இஷான் கிஷன், 9) வாஷிங்க்டன் சுந்தர், 10) யுஸ்வேந்திர சாகல், 11) குல்தீப் யாதவ், 12) அக்சர் படேல், 13) முகமது ஷமி, 14) முகமது சிராஜ், 15) உம்ரான் மாலிக், 16) அர்ஷ்தீப் சிங்.

Advertisement