IND vs NZ : நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அதிகாரபூர்வ அறிவிப்பு – 16 பேர் கொண்ட லிஸ்ட் இதோ

Dhawan-IND-Team
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணியானது இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த கையோடு நேரடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்து நாட்டிற்கு பயணித்து அங்கு நவம்பர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ள மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இதில் ஏற்கனவே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியல் வெளியாகிய வேளையில் தற்போது மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலையும் இந்திய அணியின் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இந்த ஒருநாள் தொடருக்கான அணியிலும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல், புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாய்ப்புக்காக தொடர்ந்து காத்திருக்கும் பல இளம் வீரர்களுக்கு முதன்மை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அணியின் சீனியர் வீரரான ஷிகர் தவான் மீண்டும் இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக இந்த தொடரில் செயல்பட உள்ளார். அதேபோன்று டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிஷப் பண்டே இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் துணைக்கேப்டனாக செயல்படுகிறார்.

- Advertisement -

அது தவிர்த்து ஏகப்பட்ட இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : IND vs NZ : இந்தியா நியூசிலாந்து டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – முழுலிஸ்ட் இதோ

1) ஷிகார் தவான் (கேப்டன்), 2) ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் & து.கேப்டன்), 3) சுப்மன் கில், 4) தீபக் ஹூடா, 5) சூரியகுமார் யாதவ், 6) ஷ்ரேயாஸ் ஐயர், 7) சஞ்சு சாம்சன், 8) வாஷிங்க்டன் சுந்தர், 9) ஷர்துல் தாகூர், 10) ஷபாஸ் அகமது, 11) யுஸ்வேந்திர சாஹல், 12) குல்தீப் யாதவ், 13) அர்ஷ்தீப் சிங், 14) தீபக் சாஹர், 15) குல்தீப் சென், 16) உம்ரான் மாலிக்.

Advertisement