அப்பப்பா என்னா அடி.. இங்கிலாந்து மண்ணில் வெளுத்து வாங்கி இந்தியா சாதனை துவக்கம் – விவரம் இதோ

IND
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று லண்டன் லீட்ஸ் மைதானத்தில் துவங்கிய நடப்பு ஆண்டர்சன் டெண்டில்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 359 ரன்களை குவித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

சாதனையுடன் முதல் நாளை துவங்கிய இந்திய அணி :

அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய துவங்கிய இந்திய அணியானது ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது அட்டகாசமான பார்ட்னர்ஷிப் காரணமாக முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்து அசத்தியது. சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் 42 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற சாய் சுதர்சனும் டக் அவுட்டாகி வெளியேறினார்.

- Advertisement -

அதனால் இந்திய அணி 92 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும் அதன்பின்னர் கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 101 ரன்கள் ஆட்டமிழருந்து வெளியேறிய வேளையில் சுப்மன் கில் 127 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

அதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 65 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதனால் இந்திய அணி நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 359 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி 93 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அசத்தலான சாதனை ஒன்றினை இங்கிலாந்து மண்ணில் பதிவு செய்து அசத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி முதல்நாள் ஆட்டநேரம் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்களை குவித்தது. அதுவே இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி ஒரு நாளில் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.

இதையும் படிங்க : இதெல்லாம் நடக்கும்னு நட்சத்திரத்துல இருக்கு.. நீ கலக்கு.. சுப்மன் கில்லை வாழ்த்திய – யுவ்ராஜ் சிங்

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அந்த சாதனையை முறியடித்த இந்திய அணி 359 ரன்கள் குவித்து இங்கிலாந்து மண்ணில் ஒரு நாளில் 350 ரன்களை முதல் முறையாக தாண்டியது மட்டுமின்றி முதல் நாளில் அடித்த அதிகபட்ச ஸ்கோராகவும் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement