கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவித்ததால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அந்த வகையில் புதிய கேப்டனாக தற்போது பொறுப்பேற்றுள்ள அவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியானது அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் தொடரில் விளையாடி வருகிறது.
சதம் அடித்த சுப்மன் கில்லை வாழ்த்திய யுவ்ராஜ் சிங் :
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரின் முதலாவது போட்டி நேற்று ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கிய வேளையில் இந்த போட்டியில் விராட் கோலியின் நான்காவது இடத்தில் சுப்மன் கில் களமிறங்கினார். கேப்டனாக அவருக்கு இது முதல் போட்டி என்பதனால் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.
அதனால் இந்த போட்டியில் அவர் எவ்வாறு விளையாடப் போகிறார்? என்பது குறித்து ஆவலும் அனைவரது மத்தியிலும் காணப்பட்டது. இவ்வேளையில் நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 175 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 127 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதன் காரணமாக இன்று நடைபெற இருக்கும் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் அவர் சிறப்பாக விளையாடி பெரிய ரன் குவிப்புக்கு செல்ல காத்திருக்கிறார். இந்நிலையில் நேற்று கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதம் அடித்த அவருக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.
இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் அவரது ஆலோசகரமான யுவராஜ் சிங் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் சுப்மன் கில்லை வாழ்த்தியுள்ளார். அதுகுறித்து யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : “சில விடயங்கள் நட்சத்திரங்களில் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன”. கேப்டனாக உன்னுடைய முதல் போட்டியிலேயே சதம் அடித்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இதையும் படிங்க : 68 இன்னிங்ஸ்கள் மிச்சம் வைத்து தோனியின் சாதனையை முடித்த ரிஷப் பண்ட் – டெஸ்ட் மேட்ச்னா தலைவன் வேறலெவல்
இந்திய அணியில் என்ன பொறுப்பு உனக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு விளையாடி இருக்கிறாய். இந்த போட்டியில் உன்னுடைய பேட் பேசியிருக்கிறது. இதேபோன்று இன்னும் நிறைய சிறப்பான ஆட்டங்கள் வரவேண்டும் என வாழ்த்துவதாக யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.



