
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது லீக் போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்த தொடரை அற்புதமாக துவங்கி இருக்கிறது.
அதனை தொடர்ந்து இந்திய அணி தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த முக்கியமான லீக் போட்டியானது இன்று செப்டம்பர் 14-ஆம் தேதி இரவு 8 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சுமூக உறவின்மை காரணமாக இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடக்கூடாது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும் ஐசிசி-யால் நடத்தப்படும் பொதுவான போட்டிகளில் பங்கேற்பதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று இந்திய அணியின் நிர்வாகம் அறிவித்துவிட்டது.
அதனால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் ஒரு சிலர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எவ்வித போட்டிகளிலும் விளையாடக்கூடாது என்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை புறக்கணித்து நமது எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும் என்றும் சில கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வேளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெற இருக்கும் இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று கூறப்படுவது. இதற்கு காரணம் யாதெனில் : இந்த ஆண்டு ஆரம்பத்தில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் நடத்திய தாக்குதலில் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் உயிர் இழந்திருந்தார்கள்.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவும் இல்ல.. பும்ராவும் இல்ல.. பாக் அணிக்கு எதிரான போட்டிக்கான துருப்பு சீட்டு இவர்தான் – கவாஸ்கர் கருத்து
அதன் காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தங்களது போராட்டத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய அணி கருப்பு பட்டை அணிந்து விளையாடும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று போட்டியின் ஆரம்பத்திலும் சரி, போட்டி முடிந்த பின்னரும் சரி பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மாட்டார்கள் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.