இந்திய ஜெர்சியில் இருந்த 3 ஸ்டார்கள் நீக்கப்பட்டு ஒரு ஸ்டார் மட்டும் இடம்பெற என்ன காரணம் தெரியுமா ?

Jersey
Advertisement

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெற்று வரும் ஏழாவது டி20 உலக கோப்பை தொடரானது கடந்த 17-ஆம் தேதி துவங்கி தற்போது தகுதி சுற்றுகளை கடந்து சூப்பர் 12-சுற்றிற்குள் நுழைந்துள்ளது. இந்த சூப்பர் 12-சுற்றில் இந்திய அணி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி மோத இருக்கிறது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது உலகளவில் உச்சத்தை தொட்டுள்ளது.

jadeja 1

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி ஒரு புதுமையான வடிவிலான ஜெர்ஸியை பயன்படுத்துகிறது. வழக்கமாக இந்திய அணியின் ஜெர்சியில் மூன்று ஸ்டார்கள் இடம் பெற்றிருக்கும்.

- Advertisement -

அந்த மூன்று ஸ்டார்கள் இடம்பெற காரணம் யாதெனில் 1983-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை ஆகிய வெற்றிகளைக் குறிக்கும் வகையில் அந்த மூன்று ஸ்டார்கள் இருக்கும். ஆனால் தற்போது இந்தியா விளையாடும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஜெர்ஸியில் ஒரே ஒரு ஸ்டார் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

Kohli

இந்நிலையில் அந்த ஒரு ஸ்டார் பதிக்கப்பட்டதிற்கான விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதால் அதை மட்டும் குறிப்பிடும் வகையில் 2007 ஆம் ஆண்டு ஒரே ஒரு வெற்றி பெற்றதால் ஒற்றை ஸ்டார் பதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நான் மென்டார் மட்டும் இல்ல. அதுக்கும் மேல. இந்திய அணிக்காக புதிய பொறுப்பை ஏற்ற தல தோனி – வேறலெவல்

நடப்பு உலகக் கோப்பையை கைப்பற்றி இந்திய அணி 2-வது ஸ்டாரை அதில் பதிக்கும் என்று நாம் நம்பலாம். நடப்பு உலக கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணி நிச்சயம் விராத் கோலியின் தலைமையில் அதிசயத்தை நிகழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement